Sunday, November 03, 2013

அன்னையின் பெயரில் அத்தனை சக்தி!

இது ஒரு வங்காளப் பாடல் - ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சர் காளி அன்னையை இப்பாடலில் பாடுவது வழக்கம்!



கயா கங்கா ப்ரபாசாதி
காசி காஞ்சி கெபா சாய்
காளி காளி காளி போலே
காளி காளி காளி போலே
அஜபா ஜதி ஃபுராய்
கயா கங்கா ப்ரபாசாதி
காசி காஞ்சி கெபா சாய்

(கயை, கங்கை, பிரபாஸ் (சோம்நாத்),
காசி அல்லது காஞ்சி ஏன் செல்ல வேண்டும்?
"காளி காளி காளி" என்று நானும் சொன்னால்
"காளி காளி காளி" என்று நானும் சொன்னால்
என் கடைசி மூச்சு வரையிலும் சொன்னால்
கயை, கங்கை, பிரபாஸ் (சோம்நாத்),
காசி அல்லது காஞ்சி ஏன் செல்ல வேண்டும்?)

திரி சந்த்யா ஜே போலே காளி
பூஜா சந்த்யா செ கி சாய்
திரி சந்த்யா ஜே போலே காளி
பூஜா சந்த்யா செ கி சாய்
சந்த்யா தார் சந்த்யானெ பெரெ
சந்த்யா தார் சந்த்யானெ பெரெ
கபு சந்தி நஹி பாய்
கயா கங்கா ப்ரபாசாதி
காசி காஞ்சி கெபா சாய்

மூன்று சந்தி வேளையிலும் காளி என்ற பெயரைச் சொன்னால்
பூஜைகளும் பிரார்த்தனைகளும் தேவையா?
பூஜைகள் அருகாமையில் இட்டுச் செல்லலாம், ஆனால்
பூஜைகள் தன்னைக்காட்டிலும் தாண்டிச் செல்ல இயலா.
கயை, கங்கை, பிரபாஸ் (சோம்நாத்),
காசி அல்லது காஞ்சி ஏன் செல்ல வேண்டும்?)

ஜப யக்ன பூஜா ஹோம
ஆர் கிச்சு நா மன லய்
மதனெர ஜாக யக்ய
பிரம்மமயீர் ராங்கா பாய்

(ஜபங்கள், யக்னம், பூஜை மற்றும் ஹோமங்கள்
மனதை லயிக்க விட வில்லையே
மதனின் ஜபம் எப்போதும்
அன்னையின் பாத மலர்களே.)

காளி நாமெர் எத குன்
கெபா கா ஜான்டெ பாரெ டாய்
தேவாதிதேவ் மஹாதேவ் ஜர்
பஞ்சமுகெ குன காய்
கயா கங்கா ப்ரபாசாதி
காசி காஞ்சி கெபா சாய்

(காளி அன்னையின் பெயரில் அத்தனை சக்தி
இருப்பதை யார் அறிவார்?
தேவாதிதேவன் மகாதேவனே அன்னையின் பெயரை
தன் ஐந்து முகங்களின் ஐந்து வாய் வழியே பாடிட
கயை, கங்கை, பிரபாஸ் (சோம்நாத்),
காசி அல்லது காஞ்சி ஏன் செல்ல வேண்டும்?)

6 comments:

  1. ஆஹா, அருமையான பகிர்வுக்கு நன்றி. வங்காளப் பாடல் அதிகமாய்க் கேட்டதில்லை. :)))

    ReplyDelete
  2. superb
    subbu thatha

    ReplyDelete
  3. வாங்க கீதாம்மா, சுப்பு தாத்தா,

    தீபாவளி சமயத்தில் வங்காளியர் காளி பூஜை செய்வது வழக்கம். அன்னையின் அருளால், நேற்று இங்கு நடந்த சத்சங்கம் ஒன்றில் பியானோ இசையுடன் இப்பாடலைக் கேட்டுப் புரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

    ReplyDelete
  4. அன்னை என்றதும் ஓடோடி வந்தேன். Gospel-ல் இந்தப் பாடலைப் படித்திருக்கிறேன். பகிர்தலுக்கு மிக்க நன்றி ஜீவா.

    ReplyDelete
    Replies
    1. ஓடோடி வர செய்த அன்னைக்கு வணக்கங்கள், கவிநயக்கா. Gospel - குறிப்புக்கு நன்றிகள்.

      Delete